கோவையில் தாம்ரோ கடைகள் முற்றுகை- காரணம் என்ன..?

published 6 months ago

கோவையில் தாம்ரோ கடைகள் முற்றுகை- காரணம் என்ன..?

கோவை: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது  தாக்குதல் நடத்துவது தொடர்நது  நநடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து, இலங்கை பர்னிச்சர் கடையை நிரந்தரமாக மூடக்கோரி  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், மே 17 இயக்கங்கள் முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தனர். 

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கோவையில் உள்ள இலங்கையை சார்ந்த டாம்ரோ நிறுவனத்தை சனிக்கிழமை அன்று  முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி சத்தியமங்கலம் சாலையில் உள்ள டாம்ரோ  நிறுவனத்தை முற்றுகையிட  முயன்றனர். இதற்காக காந்திபுரம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் இருந்து சென்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe