எமெர்ஜென்சி காலத்தை போலவே திமுக அரசு நடந்து கொள்கிறது- காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு...

published 6 months ago

எமெர்ஜென்சி காலத்தை போலவே திமுக அரசு நடந்து கொள்கிறது- காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு...

கோவை: இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கோவை கோனியம்மன் கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
 

அப்போது பேசிய அவர், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.
அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற ஹிந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரத நாட்டின் எல்லையில்
காத்து கிடக்கின்றனர்.
 

பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுகின்ற காட்சிகள் உலகம் முழுக்க எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் இந்து முன்னணி சார்பாக இன்று  மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தோம். ஆனால் அதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது .
 

தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் அழுவதற்கு கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது .
ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். நீதிமன்றத்தை நாடி
ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பேரியக்கம் நிச்சயம் வாங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயம் இல்லை. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல. திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்கிறது என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe