சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்: கோவையின் புதிய எஸ்.பி உறுதி!

published 6 months ago

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்: கோவையின் புதிய எஸ்.பி உறுதி!

கோவை: சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன், பயங்கரவாத தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளராக (கோவை) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் கோவை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல் மருத்துவரான நான் ஐ.பி.எஸ் பணியில் இணைந்துள்ளேன். கோவை மாவட்டத்தின் 43-வது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி. மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்வேன். 

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களைத் தடுக்கவும், போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்கவும் அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பொருள் விவகாரத்தில் முக்கிய கவனம் எடுத்து கண்காணிக்கப்படும். போதைப்பொருள் பயன்படுத்தலின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 

விபத்து நடைபெறும் இடங்களில் ஆய்வு செய்து, கோவையில் விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

சி.சி.டி.வி கேமராக்கள், போலீஸ் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழைய குற்றவாளிகள் மோதல், கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். என்றார்.

மாவட்ட கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற கார்த்திகேயனுக்கு காவல் அதிகாரிகள், பொதுமக்கள் மலர் கொடுத்து  வாழ்த்து தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe