கோவையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்- தேதிகள் அறிவிப்பு...

published 6 months ago

கோவையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்- தேதிகள் அறிவிப்பு...

கோவை: உலகமக்கள் தொகையில் 24%பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில் 1% பேர் திறந்தவெளியில் மலம் கழித்தால் கூட அந்தபகுதியில் உள்ளவர்களுக்குகுடற்புழுதொற்று ஏற்படலாம். 

தொற்றுடையமண் மூலம்,மண்ணில் விளையும் பொருட்கள் மூலம்,மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்குகுடற் புழு தொற்று ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் வருடம் இருமுறை நாடு தழுவிய குடற் புழு நீக்கும் திட்டம் 2015-ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் 23.08.2024 ஆம் தேதி கோவை மாவட்டத்திலுள்ள 1697 அங்கன்வாடி மையங்கள், 985- தனியார் பள்ளிகள், 1070- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 150-கல்லூரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328-துணை சுகாதார நிலையங்களின் முலம் அல்பெண்டாசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 30.08.2024 அன்று வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட9,56,071 குழந்தைகளுக்கும், 2,56,873, 20முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் (கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) என மொத்தம்-12,12,944 பயனாளிகள் பயனடையவுள்ளனர். குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டாசோல் மாத்திரையை) உணவு உட்கொண்ட பின்னர் நன்றாக சப்பி, மென்று விழுங்க வேண்டும். பின்னர் தண்ணீர் குடிக்கவேண்டும். அப்படியே விழுங்ககூடாது.

இச்சிறப்பு முகாமினை பார்வையிட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையிலிருந்து வட்டார மருத்துவர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் உள்ள வட்டார திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.

1 முதல் 19 வயதிற்குட்பட்ட இருபாலினர் மற்றும் 20-30 வயதுள்ள பெண்கள் அனைவரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று குடற்புழு தொற்றில்லா சமுதாயத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள் என மாவட்ட சுகாதார துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe