கோவையில் வீட்டு புரோக்கரை கொலை செய்தவர்கள் சிறையில் அடைப்பு...

published 5 months ago

கோவையில் வீட்டு புரோக்கரை கொலை செய்தவர்கள் சிறையில் அடைப்பு...

கோவை: கோவை மாவட்டம் இருகூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(59). ஒண்டிப்புதூர் மற்றும் இருகூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வீடுகளை பெற்றுத்தரும் வீட்டு புரோக்கராக பணி செய்து வந்தார். 

இதற்காக கமிஷன் பெற்றுக் கொண்டு காலியிடங்கள் மற்றும் வாடகை வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுதருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை லட்சுமி கார்டன் பகுதியில் உள்ள கருப்புசாமி என்பவர் தங்கியிருந்த வீட்டின் கதவு திறந்து, வீட்டில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டு பெண்,  இது தொடர்பாக வீட்டில் உரிமையாளருக்கு தகவல் தந்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வீட்டின் உரிமையாளர் வீட்டில் சென்று பார்த்த போது முத்துகிருஷ்ணன் தலை மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்காநல்லூர் போலீசார் முத்துக்கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். 

அதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோபி என்ற கருப்பசாமி(42) மற்றும் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஜோஸ்(33) ஆகிய இருவரை கைது செய்தனர். போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் கருப்பசாமி லட்சுமி கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்த நிலையில், தனக்கு ஒப்பந்த முறையில் வீடு பெற்று தருமாறு ஒரு லட்சம் ரூபாய் முத்துக்கிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட முத்துக்கிருஷ்ணன் வீடு பெற்று தராமல் காலம் கடத்தி வந்த நிலையில் கருப்பசாமி கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் ஜோஸ் ஆகிய இருவரும் முத்துகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்துள்ளனர். மூவரும் இணைந்து மது அருந்தி கொண்டிருக்கிற நிலையில் கருப்பசாமி தான் கொடுத்த அட்வான்ஸ் தொகை குறித்து கேட்டுள்ளார். 

இதனால் இருவருக்குமிடையேவாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபி மற்றும் ஜோஸ் ஆகிய இருவரும் இணைந்து முத்துக்கிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் முத்துகிருஷ்ணன்   உயிரிழந்த நிலையில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe