போத்தனூரில் நடைபெற்ற வள்ளிகும்மி ஆட்டம்...

published 5 months ago

போத்தனூரில் நடைபெற்ற வள்ளிகும்மி ஆட்டம்...

கோவை: கோவை போத்தனூர் கணேசபுரம் பகுதியில் நடைபெற்ற முத்துக்குமரன் வள்ளி கும்மி நிகழ்ச்சியில் ஒரே மாதிரியான உடை அணிந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.


கோவை போத்தனூர் அடுத்த கணேசபுரம்,  பகுதியில் கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் முத்துக்குமரன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே மாதிரியான உடை அணிந்து முத்துக்குமரன் வள்ளி கும்மி நடனம் ஆடினர்.  

இதற்காக இரண்டு மாதங்கள் கணேசபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்களுக்கு வள்ளி கும்மி நடன பயிற்சி வழங்கப்பட்டது.  அதன் அரங்கேற்ற விழாவில் அப்பெண்கள் உற்சாகமாக நடனம் ஆடினர். 

இது குறித்து பேசிய கொங்குநாடு கலைக்குழு நிறுவனர் பாலு கூறும் போது :  கொங்கு மண்டல பாரம்பரிய நடனமான வள்ளி கும்மி நடனத்தை ஆரம்பத்தில் ஆண்கள் மட்டும் ஆடி வந்தனர்.  தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வள்ளி கும்மி  நடனத்தில் அதிகளவு பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். 

கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் குழு சார்பில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் பேர் வள்ளி கும்மி நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.  மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் வள்ளிகும்மி  அரங்கேற்றி வருகிறது.  கொங்கு பகுதியில் பாரம்பரிய வள்ளி கும்மி நடனம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு,  பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நடனம் மனரீதியாகவும்,  உடல் ரீதியாகவும் பெண்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe