சிங்காநல்லூர் தொகுதியில் கொடிக் கம்பம் வைப்பதற்கு தடையில்லா சான்று வேண்டும்- தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை மனு...

published 3 weeks ago

சிங்காநல்லூர் தொகுதியில் கொடிக் கம்பம் வைப்பதற்கு தடையில்லா சான்று வேண்டும்- தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை மனு...

கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கொடி கம்பம் வைப்பதற்கு தடையில்லா சான்று வேண்டுமென தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் அண்மையில் வெளியானது. நடிகர் விஜய் இவற்றை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அக்கட்சியின் கொடியை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் தெரிவு படுத்துவதற்கு அக்கட்சியினர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட, செளரிபாளையம் பேருந்து நிறுத்தம், உடையாம்பாளையம், காந்திநகர் உப்பிலிபாளையம், நீலிகோன்ம்பாளையம், SIHS காலனி, சிஎம்சி காலனி உட்பட 18  இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு தடையில்லா சான்று மற்றும் அனுமதி வேண்டி மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவணகுமார் அளித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe