விநாயகர் சதுர்த்தி பண்டிகை- ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த புலியகுளம் முந்தி விநாயகர்...

published 5 months ago

விநாயகர் சதுர்த்தி பண்டிகை- ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த புலியகுளம் முந்தி விநாயகர்...

கோவை: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள்  வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர் சிலை இருக்கக்கூடிய கோவையில் பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. இங்குள்ள விநாயகர் சிலை 19 அடி உயரமும் பத்து அடி அகலமும் கொண்ட சிலையாகும்.

இன்றைய தினம் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 50 கிலோ சந்தன காப்பும் இரண்டு டன் மலர்களாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலையே விநாயகருக்கு 16 வகையான வாசனையை திரவியங்கள் அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe