சதுர்த்தி ஸ்பெஷல்: கோவையில் அரண்மனை செட்டில் விநாயகர்!

published 5 months ago

சதுர்த்தி ஸ்பெஷல்: கோவையில் அரண்மனை செட்டில் விநாயகர்!

கோவை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு  இந்து அமைப்புகளின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ராஜவீதி தேர்முட்டி பகுதியில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் அரண்மனை போன்று செட் அமைத்து 10 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அரண்மனை நுழைவாயிலில் இருக்கும் வாயிற்காவலர்கள் போலவே இங்கும் வாயிற்காவலர்கள் சிலைகள் வைக்கப்படுள்ளன. 

இதற்குள் இரு புறங்களிலும் விநாயகர் நடனமாடுவது போன்று  ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்கு அமைக்கப்பட்டுள்ள  அரண்மனை போன்ற  செட் அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe