கோவையில் பஜனையுடன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

published 5 months ago

கோவையில் பஜனையுடன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

கோவை: கோவை சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பொதுமக்கள் பலரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை புகைப்படம் எடுத்து அனுப்பினர். அவை நமது செய்தித்தளத்தில் பதிவாகியுள்ளன. செய்தியைப் படிக்க...

இதனிடையே சிங்காநல்லூரை அடுத்த நஞ்சப்பா நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர், கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு அதிகாலை முதலே பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாலையில் ஓம்கார் பஜனை சமாஜம் குழுவினரின் பஜனை நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு விநாயகர் குறித்த பாடல்களைப் பாடி பரவசமடைந்தனர்.
தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe