கோவையில் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர்...

published 1 week ago

கோவையில் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர்...

கோவை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கினார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடல் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை   வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக அதன் தலைவர் விக்னேஷ் மற்றும் இளைஞரணி தலைவர் பாபு ஆகியோர் தலைமையில் கோவை குறிச்சி பொங்காளியம்மன் கோவில் முன்பாக  திரண்ட தொண்டர்கள் தமிழகத்தி்ல் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம் என உற்சாகமாக கோஷமிட்டனர்.

தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணைய அனுமதி - 23"ந்"தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள முதல் மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி என அடுத்த அடுத்த அறிவிப்புகள் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை தருவதோடு 
தமிழக அரசியலில் நடிகர் விஜயின் இந்த அடுத்த கட்ட நகர்வுக்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது என்பது குறிப்பிடதக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe