கோவையில் தாய் பிரிந்த ஏக்கத்தில் மாணவர் விபரீத முடிவு!

published 5 months ago

கோவையில்  தாய் பிரிந்த ஏக்கத்தில் மாணவர் விபரீத முடிவு!

கோவை: கோவையில் தாய் பிரிந்த ஏக்கத்தில் பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (45). ஆட்டோ டிரைவர். இவரது மகன் தர்சன் (14). இவர் அதே பகுதி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

தர்சன் ஒரு வயது குழந்தையாக இருந்தபோது அவரின் தாய் விட்டு சென்றுவிட்டார். அவர் தனது கணவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து தந்தையின் பாதுகாப்பில் தர்சன் வளர்ந்து வந்தார்.

மகனை வளர்க்க அவரது தந்தையும் 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தாய் விட்டு சென்றதால் தர்சன் அடிக்கடி அவரை நினைத்து கவலையுடன் காணப்பட்டதாக தெரிகிறது.

அடிக்கடி இடையர்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். ‘‘எனது தாய் இருந்திருந்தால் என்னை நல்லபடியாக கவனித்திருப்பார். நானும் சந்தோஷமாக இருந்திருப்பேன்’’ என உறவினர்களிடம் ஏக்கத்துடன் தர்சன் கூறி வந்துள்ளார்.

சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற தர்சன் பல்வேறு இடங்களுக்கு சிலை ஊர்வலத்திற்கு சென்றார்.

பின்னர் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் தனது தந்தையிடம் கால் வலிக்கிறது. என்னால் நடக்க முடியவில்லை எனக்கூறியுள்ளார்.

இதைகேட்ட அவர் தந்தை, ‘‘நீ வீட்டில் ஓய்வு எடு. நான் ஆட்டோ சவாரி போய்விட்டு வந்து விடுகிறேன். கடையில் சாப்பாடு வாங்கி வருகிறேன்’’ எனக்கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் தாய் தவிக்கவிட்டு சென்றதை நினைத்து கவலையான மன நிலையில் இருந்த தர்சன் வீட்டில் தூக்கு போட்டு இறந்துவிட்டார்.


மகன் இறந்த சிறிது நேரத்தில் உணவுடன் வீட்டிற்கு வந்த தந்தை மகன் தற்கொலை செய்திருப்பதை பார்த்து கதறி அழுதார். தாய் பாசத்தினால் தாயை காண முடியாத ஏக்கத்தில் மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe