கோவையில் 1500 பெண்களுக்கு தையல் இயந்திரம்- மத்திய நிதி அமைச்சர் வழங்கினார்...

published 6 days ago

கோவையில் 1500 பெண்களுக்கு தையல் இயந்திரம்- மத்திய நிதி அமைச்சர் வழங்கினார்...

கோவை: கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா இணைந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முயற்சியில் தொடங்கப்பட்ட 'சுயம்' திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி பெற்ற ஏழை பெண்கள் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு தையல்  இயந்திரங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பேசுகையில், தொழில் வர்த்தகத்திற்கு பேர்போன கோவையில், பெண்களின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில், கொண்டுவரப்பட்ட சுயம் திட்டத்தின் வாயிலாக 1500 பெண்களின் வாழ்க்கை மாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக்காட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது அற்புதமான நிகழ்வு என்றார்.

மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட நிதி அமைச்சர், பிஎம் ஜன் தன் யோஜனாவில், கிட்டத்தட்ட 60% கணக்குகள் பெண்களிடம் உள்ளது என்றும் இந்தத் திட்டம் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும் சக்தியை கொடுக்கிறது என்றும் கூறினார். மேலும் ஜல்ஜீவன் திட்டம், எரிவாயு சிலிண்டர் கொடுப்பது உள்ளிட்ட பல திட்டங்களால் பெண்களின் வாழ்வு முன்னேற்றமடைந்து வருவதாக கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாடு முழுவதும் பிஎம் ஜன் தன் யோஜனாவில் உள்ள 53 கோடி அக்கவுண்ட்களில் 29.6 கோடி அக்கவுண்ட்கள் பெண்கள் உபயோகித்து வருவதாகவும் தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் குறிப்பாக கோவையில் மட்டும் 5 லட்சம் பெண்கள் ஜன் தன் அக்கவுண்ட் வைத்திருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய நிதி அமைச்சர், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவில் கோவையில் இருந்து மட்டும் இரண்டரை லட்சத்திற்கும் மேலான பெண்கள் சேர்ந்திருப்பதாகவும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவில் ஏழு லட்சம் பெண்கள் கோவையில் இருந்து மட்டும் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கோவையில் இருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான பெண்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்ந்திருப்பதாகவும் கோவையில் 15 லட்சம் பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் பயன்பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

பெண்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கும் ITI  மையங்கள் நாடு முழுவதும் 311 இருக்கிறது என்றும் கோவை கவுண்டம்பாளையத்தில் ஒரு பெண்கள் ITI மையம் இருக்கிறது என்றும் கூறினார்.

பெண்கள் தன்மானத்துடன் வருமானம் ஈட்டி வாழ்வாதாரம் பெறும் வகையில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe