பிரதமர் பிறந்தநாள்- ரத்த தானம் செய்ய வந்த வானதி சீனிவாசன்- இறுதியில் நடந்தது என்ன..?

published 1 day ago

பிரதமர் பிறந்தநாள்- ரத்த தானம் செய்ய வந்த வானதி சீனிவாசன்- இறுதியில் நடந்தது என்ன..?

கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ராம் நகர் பகுதியில் பாஜக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. 

இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு  துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா கலந்து கொண்டு பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை நலத்திட்டங்களை பல்வேறு இடங்களில் செயல்படுத்த உள்ளதாகவும் பிரதமர் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் இந்த நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு அவர் நன்றாக இருக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம் எனவும் கூறினார். மேலும் அம்மாவின் பெயரில் மரக் கன்று நடும் திட்டம் என்ற திட்டத்தையொட்டி குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம், உறுப்பினர் சேர்ப்பு முகாம்  ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  மாநிலத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா உடன் சேர்ந்து சித்தாப்புதூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை, மரக்கன்று நடும் திட்டம் ஆகியவற்றை செய்ததாகவும் கூறினார்.

தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் ரத்த தான முகாம் நடைபெற்று வருவதை குறிப்பிட்ட அவர் தற்போது வரை முப்பது பேர் ரத்த தானம் செய்துள்ளதாகவும் ரத்த தானம் குறித்தான விழிப்புணர்வு, ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் ஊக்குவித்தல் ஆகியவை பொதுமக்களுக்கு தேவைப்படுகிறது எனவும் அதன்படி இந்த ரத்ததான முகாம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 
தொடர்ந்து விஸ்வகர்மா ஜெயந்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

அரை மணி நேரத்திற்கு முன்பு தான் மூத்த தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார் என எச் ராஜாவின் செய்தியாளர் சந்திப்பை சுட்டிக்காட்டிய அவர், தொடர்ந்து நானும் செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் கட்சிக்கு அழகல்ல என்றார். ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை படை என்ற ஒரு மாணவர் அமைப்பு இருப்பதை குறிப்பிட்ட அவர் அது ஆக்டிவாக இல்லை எனவும் நான் என்னுடைய தொகுதியில் இருக்கின்ற மாணவர்களை  ஊக்கப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் எனது தொகுதியில் பெரும்பாலும் நாட்டு மரங்களையே குறுங்காடுகள் திட்டத்தில் வைப்பதாகவும் சிறுதுளி அமைப்பினரின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் என்னைப் பொறுத்தவரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குள் எங்கெங்கெல்லாம் பொது இடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் காடுகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் என தெரிவித்தார். மேலும் ரத்த தானம் என்னால் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தால் ரத்த தானம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக இரத்த தானம் செய்வதற்கு பரிசோதனை செய்ததில் Blood Point குறைவாக இருந்ததால் ரத்த தானம் செய்ய இயலாது என்று மருத்துவர்கள் கூறினர். அதனால் அவர் ரத்த தானம் செய்யவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe