கோவையில் உணவுத் தேடி குட்டியுடன் அலையும் யானை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 1 day ago

கோவையில் உணவுத் தேடி குட்டியுடன் அலையும் யானை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, பேரூர்,  வடவள்ளி, காளையனூர், மருதமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில் வடவள்ளி அடுத்த பொம்மனம்பாளையத்தில் இரவு நேரத்தில் வனத் துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு சென்றனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வனப் பகுதியில் இருந்து தனது குட்டியை அழைத்துக் கொண்டு உணவு தேடி நடந்து செல்லும் காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

மேலும் சோமையம்பாளையம் அருகே உள்ள கெம்பனூர் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் ஆலங்குட்டை எதிரில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்று உள்ளது.

அதேபோன்று நேற்று முன்தினம் இரவு பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்துக்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த பசு மாட்டை அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை தந்ததால் வயிறு மற்றும் பின்புறம் பகுதிகளில் சரமாரியாக குத்தியது இதில் பசுமாடு அதே இடத்திலே உயிரிழந்தது.

மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்ட சோளம் தென்னை காய்கறி பயிர்களை சேதப்படுத்தி சென்று உள்ளது.

எனவே காட்டு யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய தோட்டங்கள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவதை தமிழக அரசு வனத் துறையினும் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DAAyiYVg2RL/?igsh=MWE2ejhia28xaDN5

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe