தமிழ் பயிலகம் சமூக நல அறக்கட்டளை நடத்திய கண் பரிசோதனை

published 2 years ago

தமிழ் பயிலகம் சமூக நல அறக்கட்டளை  நடத்திய கண் பரிசோதனை

கோவை: கோவையில் தமிழ் பயிலகம் சமூக நல அறக்கட்டளை சார்பாக மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழ் பயிலகம் சமூக நல அறக்கட்டளை சார்பாக ஏழ்மை நிலை குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது மருத்துவ உதவி என பல்வேறு சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் பயிலகம் சமூக நல அறக்கட்டளை ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் மற்றும் வாசன் ஐ கேர் ஆகியோர் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மதுக்கரையில் உள்ள நாராயண குரு பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.

அறக்கட்டளையின் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்ச்சியில், ஆதி ட்ரடேர்ஸ் பூவை கே பழனிச்சாமி கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை மேலாளர் பழனிச்சாமி வாசன் ஐ கேர் மருத்துவர் பிரகதி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் சாத்து குட்டி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.

இந்த முகாமில் இலவசமாக கம்ப்யூட்டர் கண் பரிசோதனை கண்ணாடி பரிசோதனை கண் நீர் அழுத்தம் மற்றும் விழித்திரை பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை உடன் மருத்துவர் ஆலோசனை இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe