கோவை மருதம் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி துவங்கியது...

published 4 months ago

கோவை மருதம் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி துவங்கியது...

கோவை: கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவங்கியது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.தீபாவளி 2024 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்கள் அனைத்து விற்பனை நிலையங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள்,போர்வைகள், படுக்கு விரிப்புகள்,வேட்டிகள், தலையணை உறைகள்,லுங்கிகள், துண்டு ரகங்கள்ஆடவர் அணியும் ஆயுத்த சட்டைகள்,மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமான விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது.காஞ்சிபுரம், சேலம்,கோவை,ஆரணி,தஞ்சை போன்ற பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe