தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேண்டுமா? கோவை விவசாயிகளுக்கு அழைப்பு

published 2 years ago

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற வேண்டுமா? கோவை விவசாயிகளுக்கு அழைப்பு

 

கோவை: தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு கோவை வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-2023 ம் ஆண்டிற்கு கோவை, மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற இலக்கு பெறப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்திற்கு மொத்தம் 1500 ஹெக்டேரில் தானிய பயிருக்கு 500 ஹெக்டேருக்கும் பயறு வகை பயிருக்கு 700 ஹெக்டேருக்கும் 

நிலக்கடலை மற்றும் எள் பயிருக்கு தலா 150 ஹெக்டேருக்கும்  இலக்கு பெறப்பட்டுள்ளது.

தற்போது வேளாண் அதிகாரிகள் அந்தந்த வட்டாரங்களில் பயனாளிகள் தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது, தரிசாக உள்ள நிலத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கு ஒரு கிராமத்தில் குறைந்தபட்ச தொகுப்பாக 10 ஏக்கர் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் தேர்வு செய்த தரிசு நிலத்தில் புதர்களை அகற்றவும் .நிலத்தை சமன் செய்யவும், உழவு பணிக்கு தேவையான வாடகை இயந்திரம் வேளாண் பொறியியல் துறையின் மூலமும், தேவையான விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்து போன்ற பொருட்கள் வேளாண்மை துறையின் மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. 

அதன்படி, பயிறு வகை பயிர், தானியம், எள் பயிர்க்கு ஒரு ஹெக்டேருக்கும் மானியம் 50 சதவீதம் அல்லது ரூபாய்.13.500/- மற்றும் நிலக்கடலை பயிர்க்கு ரூபாய்.22,900/-யினை பயனாளிக்கு பின்னேற்பு மானியமாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.

தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் தரிசு நிலமாக இருந்ததற்கான சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று அருகில் உள்ள அந்தந்த வட்டாரங்களில் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். 

இவ்வாறு வேளாண்துறை அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe