ஆன்லைன் மூலம் தெரியவந்த டிரேடிங் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நபர்- கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார்...

published 4 months ago

ஆன்லைன் மூலம் தெரியவந்த டிரேடிங் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நபர்- கோவை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார்...

கோவை: சிவகாசி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு ஆன்லைன் மூலமாக கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த Daily View Trading என்ற நிறுவனத்தை சேர்ந்த விவேக்சேது, விஷ்வலிங்கம் என்பவர்கள் பழக்கமாகி உள்ளனர். இவர்கள் அவர்களது டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி வரும் என கூறிய நிலையில் சரவணன் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.


ஆரம்பத்தில் முதலீட்டிற்க்கான வட்டி சரியாக வந்ததை தொடர்ந்து மேலும் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்து சிறுது மாதங்களில் வட்டி வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென வட்டி வருவது நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இது குறித்து ஆராய்ந்த போது விவேக் சேது, விஷ்வலிங்கம் ஆகியோர் நிறுவனத்தை காலி செய்து விட்டதாகவும் இது குறித்து கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் 2022ம் ஆண்டு வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர், விவேக் சேது விஷ்வலிங்கம் என்பவர்களிடம் ஆன்லைன் மூலமாக பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்களது டிரேடிங் நிறுவனத்தில் அதிக வட்டி வரும் என்று கூறியதால் பணத்தை செலுத்தியதாகவும் முதலில் சரியாக வட்டி வந்து கொண்டிருந்த நிலையில் 22 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்திருந்ததாகவும், நான்கைந்து மாதங்களுக்கு பிறகு பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக கூறினார்.

இது குறித்து விருதுநகர் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் கோவையில் புகார் அளிக்க பரிந்துரைத்ததாகவும் அதனிடையே அவர் நிறுவனத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இரத்தினபுரி காவல் நிலையத்திற்கு பரிதுரை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2022ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தனக்கு உடல் நல பாதிப்பு இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe