கோவையில் சார் பதிவாளர் கைது; லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்!

published 4 weeks ago

கோவையில் சார் பதிவாளர் கைது; லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்!

கோவை: கோவையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லூரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நான்சி நித்யா கரோலின் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே கருப்பசாமி என்பவரது ஆவணங்களை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கியுள்ளார். ஏற்கனவே பெறப்பட்ட புகாரின் பேரில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலினை கைது செய்தனர்.

கோவை செய்திகளை எவ்வித சார்பும், சமரசமும் இல்லாமல் அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் இணைவீர்

மேலும், லஞ்சம் வாங்க உதவி செய்த இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவையும் போலீசார் கைது செய்தனர். சார் பதிவாளரின் காரில் சோதனை செய்த போது, அதில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பணம் இருந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe