போலீசார் குடும்பத்திற்கு மேலும் 2 கடைகள்; தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்!

published 2 weeks ago

போலீசார் குடும்பத்திற்கு மேலும் 2 கடைகள்; தொடங்கி வைத்தார் காவல் ஆணையர்!

கோவை: கோவை மாநகர போலீசாரின் குடும்பத்தினர் தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் விதமாக மாநகர ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக மேலும் இரண்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் பேரில் காவலர்களின் குடும்பத்தினருக்கு, கோவை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 20க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதில் சிறுதானிய ஜஸ் கீரீம், ஜாம், ஜூஸ், ஸ்குவாஷ், ஊறுகாய், சத்துமாவு, சமையலுக்கு பயன்படும் பொடிகள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை தயாரித்தல், விளம்பரப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற விற்பனை கண்காட்சியில் மேற்படி காவலர் குடும்ப பெண்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை கூடங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். அதனை தொடர்ந்து, காவலர் குடும்பத்தினர் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய அவர்களின் நலன் கருதி கோவை மாநகர ஆயுதப்படை காவல் ஆவின் பாலகம் அருகில் ஒரு கடையும், காந்திபுரம் காவல் ஆவின் பாலகம் அருகில் ஒரு கடையும் புதிதாக கட்டப்பட்டு, கடந்த 4ம் தேதி முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, காவலர் குடும்பங்களின் நலன் கருதி தற்பொழுது கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் மேலும் இரண்டு கடைகள் புதிதாக கட்டப்பட்டது.

அந்த 2 கடைகளையும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இன்று திறந்து வைத்தார்கள்.

இரண்டு கடைகளில் ஒன்று காய்கறி/மளிகைக் கடையாகவும், மற்றொன்று மகளிர் தையலகமாகவும் செயல்படவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe