ஈஷா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் - சத்குரு

published 2 weeks ago

ஈஷா வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம் - சத்குரு

ஈஷா பெண் துறவிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று (18/10/2024) தீர்ப்பு வழங்கியது. பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருக்கின்றனர். 

அதனால் இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ’நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்’ என சத்குரு கூறியுள்ளார்.

இது குறித்த அவரின் சமூகவலைத்தள பதிவில் “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது” எனக் கூறியுள்ளார்.

https://x.com/SadhguruTamil/status/1847312679628583005

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe