தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு நானோ உரம் கண்டுபிடிப்புக்கான செயல்முறை காப்புரிமை...

published 2 weeks ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு நானோ உரம் கண்டுபிடிப்புக்கான செயல்முறை காப்புரிமை...

கோவை: சென்னையிலுள்ள காப்புரிமை அலுவலகம், மெதுவாக நைட்ரஜனை வெளியிடும் நானோ உரம் மற்றும் அதன் உற்பத்தி கண்டுபிடிப்புக்கான செயல்முறை காப்புரிமையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் காப்புரிமையில் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான லதா, முனைவர் சுப்பிரமணியன் மற்றும் முனைவர் ஜெயசுந்தர ஷர்மிளா ஆகியோர் பங்களித்துள்ளனர்.

நானோ உர கலவைகளை இலைவழி தெளிப்பதில் உள்ள சிக்கலை தீர்க்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்னோடியாக இருந்து, நேரிடையாக மண்ணில் இட உகந்த நானோ யூரியா உரத்தை உருவாக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பில், லிக்னின் சிட்ரிக் அமிலத்துடன் குறுக்கில்-இணைக்கப்பட்ட யூரியா மூலக்கூறுகள் மற்றும் இயற்கை பாலிமர் கைடோசானுடன் இணைக்க ஒரு மேட்ரிக்ஸாக பயன்படுத்தப்பட்டது.

இந்த உரத்தின் செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், சாதாரண யூரியாவின் நைட்ரஜன் வெளியீடு நான்கு நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் 33% நைட்ரஜன் உள்ளடக்கம் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நானோ யூரியா மண்ணில் 30 முதல் 35 நாட்கள் வரை நீடித்த வெளியீட்டை உறுதி செய்தது. இத்தகைய நீடித்த ஊட்டச்சத்துக்கள் வெளியீட்டானது. சுற்றுச்சூழலுக்கான ஊட்டச்சத்து இழப்பைக் குறைப்பதுடன், மேம்படுத்தப்பட்ட நைட்ரஜன் பயன்பாட்டுத் திறனுக்கும் பங்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe