கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் மூவர் கைது!

published 2 weeks ago

கோவை கார் குண்டு வெடிப்பு: மேலும் மூவர் கைது!

கோவை: கோவை உக்கடம்  பகுதியில் அமைந்துள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர்.

உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி காரில் குண்டு வெடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த குண்டு வெடிப்பிற்குக் காரணமான ஜமேஷா முபீன் என்பவர் காருக்குள் இருந்தவாறே உடல் கருகி உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனிடையே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அபு அனிபா, சரண் மாரியப்பன், பாவாஸ் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe