பசுமைவழிச் சாலை வேண்டாம்- கோவையில் விவசாயிகள் கோரிக்கை…

published 4 days ago

பசுமைவழிச் சாலை வேண்டாம்- கோவையில் விவசாயிகள் கோரிக்கை…

கோவை: கோவையில் குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் பைப்பாஸ் வரையிலும், கரூர்- கோவை வரையிலும் அமைய உள்ள பசுமை வழிச் சாலையை வேண்டாம் என கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த அவர்கள் நாளைய தினம் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் முதல்வர் தங்கள் கோரிக்கை குறித்தும் தங்களின் கருத்துக்கள் குறித்தும் ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் பைபாஸ் வரை உள்ள சாலையில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருவதாகவும் சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏற்கனவே போதிய இடம் உள்ள நிலையில் கூடுதலாக விவசாய நிலத்தை எடுப்பதற்கு நெடுஞ்சாலை துறை முயல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பக பகுதி வந்து விடுவதால் சாலையை விரிவுபடுத்துவது வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் எனவும்  அப்பகுதியில் சில தொழில்துறையினர் இடங்களை வாங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள் தொழில் துறையினரின் தேவைகளுக்காகவே சாலையை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். அவசியம் இருக்கும் பட்சத்தில் மட்டும் சாலையை விரிவாக்கம் செய்வதற்கு இடங்களை தருவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஏற்கனவே சாலை விரிவாக்கத்திற்கு போதுமான இடங்கள் உள்ள நிலையில் வேண்டுமென்றே விவசாய நிலத்தில் சாலை அமைப்பதற்கு முயல்வதாக கூறினர்.

இது சம்பந்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருவதாகவும் தற்பொழுது போடப்பட்டுள்ள 3A சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe