கோவையில் இடை பாலின பெருமை நடை..!

published 1 week ago

கோவையில் இடை பாலின பெருமை நடை..!

கோவை:  இடை பாலினத்தவர்கள் உரிமைகள் குறித்து கோவையில் பெருமை நடை பேரணி நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் 26ம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை இடை பாலின விழிப்புணர்வு வாரமாகவும், அக்டோபர் 28ஆம் தேதி  இடைப்பாளினா விழிப்புணர்வு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில், கோவையில் இந்தியாவின் முதல் இடை பாலின மக்களின் பெருமை நடை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

இதில் இடை பாலின மக்களும், இடை பாலின சமுக செயல் பாட்டாளர்களும் கலந்து கொண்டு, இடை பாலின மக்களின் உரிமைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய ஏந்தி பேரணி சென்றனர்.

இதுகுறித்து தி வாய்ஸ் இந்தியா இடை பாலின மக்கள் உதவி குழு ஒருங்கிணைப்பாளர் விநோதன் கூறுகையில், "இடை பாலின மக்களின் வலிகள் மிக கொடுமையானது பிறவியில் மரபணு( chromosome) இணைவினால் உருவாகும் வேறுபாடு காரணமாகவே இடையின மக்கள் பிறக்கிறார்கள், வளர் இளம் பருவத்தில் தங்களது வேறுபாட்டை உணர்ந்து அவர்களது அடையாளத்தை தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக இடை பாலின மக்கள் விழிப்புணர்வு நடை நமது கோவையில் நடைபெற்று உள்ளது பெருமை வாய்ந்தது." என்றார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe