திருப்பதி திருமலை ஹவுஸ் புல்... திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகள் தான்...!

published 2 years ago

திருப்பதி திருமலை ஹவுஸ் புல்... திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகள் தான்...!

திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன.

இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 32 கம்பார்ட்மெண்ட்களும் பக்தர்கள் கூட்டம் காரணமாக நிறைந்து வழிகின்றன. இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 32 கம்பார்ட்மெண்ட்களும் பக்தர்கள் கூட்டம் காரணமாக நிறைந்து வழிகின்றன.

மேலும் அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். மேலும் அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே பக்தர்கள் வரிசையில் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

இதனால் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து இலவசமாக தரிசிக்க வேண்டிய நிலை நிலவுகிறது. மேலும் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பக்தர்கள் தங்களுடைய வாகனங்களிலும், திறந்த வெளிகளிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 40 மணி நேரம் காத்திருந்து இலவசமாக தரிசிக்க வேண்டிய நிலை நிலவுகிறது. மேலும் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பக்தர்கள் தங்களுடைய வாகனங்களிலும், திறந்த வெளிகளிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அறைளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அவற்றை ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள் ஆன பத்மாவதி விருந்தினர் மாளிகை கவுன்டர், மத்திய வரவேற்பு நிலைய கவுன்டர் ஆகியவை மூடப்பட்டுள்ளன. அறைளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அவற்றை ஒதுக்கீடு செய்யும் கவுண்டர்கள் ஆன பத்மாவதி விருந்தினர் மாளிகை கவுண்டர், மத்திய வரவேற்பு நிலைய கவுண்டர் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

இந்நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் குடிநீர், உணவு ஆகியவற்றை வழங்கி வருகிறது.

நேற்று ஒரே நாளில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை 88,748. அவர்களில் 46,400 பக்தர்கள் இலவச தரிசனம் மூலமும், 25, 819 பக்தர்கள் 300 ரூபாய் தரிசன மூலமும்,கட்டண சேவை டிக்கெட்டுகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் மூலம் 16529 பக்தர்களும் ஆக மொத்தம் 88,748 பக்தர்கள் நேற்று ஏழுமலையானை வழிபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe