ஆட்டுக்கு நீதி வேண்டும் : ஒலிப்பெருக்கியுடன் கோவையில் தர்ணா

published 2 years ago

ஆட்டுக்கு நீதி வேண்டும் : ஒலிப்பெருக்கியுடன் கோவையில் தர்ணா

கோவை: ஆட்டை விஷம் வைத்து கொன்றதற்கு இது வரை நீதி கிடைக்கவில்லை- ஒலிப்பெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட நபரால் பரபரப்பு.

கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். கடந்த 2019ம் ஆண்டு இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மூன்று பேர்(செந்தில், பாண்டியன், பழனிச்சாமி) இவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை விஷம் வைத்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வடவள்ளி காவல் நிலையம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒலிபெருக்கியுடன்  தர்ணாவில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர் அப்பொழுது அவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

ஒலிபெருக்கியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தர்ணாவில் ஈடுபட்ட நபரால் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe