பள்ளி தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது..!

published 2 years ago

பள்ளி தூய்மை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது..!

கோவை: பள்ளி தூய்மை பணிகளில், மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆய்வுக்குப் பள்ளிக்குச் செல்லும் அதிகாரிகள், வளாக பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்தப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனரகம் சார்பில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், வளாகத்திற்குள் இருக்கும் மரங்களின் இலை, சருகுகள், வகுப்பறை மேற்கூரைகளில் குப்பையாகத் தேங்கிக் கிடக்கின்றன.  அவற்றை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில், மருந்து தெளிக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள், புதர்கள், குப்பைகள் தேங்காமல், தூய்மையை உறுதி செய்ய வேண்டும். இப்பணிகளில் மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக்கூடாது. நூறுநாள் வேலைத் திட்ட பணியாளர்கள், உள்ளூர் நபர்கள், தூய்மை பணியில் ஈடுபடுவோரை இப்பணியில் ஈடுபடுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வைப்பு வைக்கப்பட்டிருந்த பள்ளி பராமரிப்பு நிதித் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. தவிர, நடப்பாண்டிற்கு மானியமும் வழங்காத நிலையில், இச்செலவினங்கள் எப்படி மேற்கொள்ள முடியும் என, தலைமையாசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe