ஊராட்சி மன்றமா? ஜாதி சங்கமா? : கணியூர் ஊராட்சி மன்றத்தில் ஜாதி பெயர் கொண்ட பெயர்ப்பலகை!

published 2 years ago

ஊராட்சி மன்றமா? ஜாதி சங்கமா? : கணியூர் ஊராட்சி மன்றத்தில் ஜாதி பெயர் கொண்ட பெயர்ப்பலகை!

கோவை: கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர்  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த காலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றிய கணியூர் ஊராட்சி மன்ற தலைவர்கள்  உறுப்பினர்கள் ஊராட்சிமன்ற செயலர்கள் உள்ளிட்ட பெயர் கல்வெட்டுக்கள் மன்ற வளாக சுற்றுச்சுவரில்  பதிக்கப்பட்டுள்ளது.

அதன் அருகிலேயே பிளக்ஸ் போர்டில் செய்யப்பட்ட அசல் கல்வெட்டு போன்று வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் குறிப்பிட்ட சாதியின் பெயரை தலைவர் துணைத் தலைவர் பெயருக்குப் பின்னால் அழுத்தம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சாதியின் பெயரை கொண்ட பெயர் பலகைகள் அரசு துறையில் பயன்படுத்தக் கூடாது என்கின்ற விதிமுறை இருந்தும் கணியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அசல் கல்வெட்டு போன்று  செய்யப்பட்ட பெயர் பலகை உள்ளது. பெயருடன் ஜாதிப் பெயரையும் இணைத்து வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு எதற்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் வினா எழுப்பி வருகிறார்கள்.

எனவே கணியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜாதி பெயர் கொண்ட பிளக்ஸ் பேனர் அகற்றப்படுவதோடு, ஜாதி ரீதியான பெயர் பலகைகளை வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும்  வலியுறுத்தியுள்ளனர்.

எனவே கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட கிராம பஞ்சாயத்துக்கள்  உதவி இயக்குனர் மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சர்ச்சைக்குரிய பெயர் பலகையை  உடனடியாக  உத்தரவிட்டு, ஜாதிப் பெயரை குறிப்பிட்டு  வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனரை அகற்ற உத்தரவு விடுவாரா என்று அனேக பொதுநல நோக்கர்களின் எண்ணமாக திகழ்கிறது என்பது திண்ணம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe