வேடந்தாங்கல் பறவைபோல் தாவிவிட்டார் ஆறுக்குட்டி : இ.பி.எஸ் விமர்சனம்

published 2 years ago

வேடந்தாங்கல் பறவைபோல் தாவிவிட்டார் ஆறுக்குட்டி : இ.பி.எஸ்  விமர்சனம்

கோவை: முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி அதிமுகவில் இருந்தார் என்றும் தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார் என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெ., ஆட்சி இருக்கும் பொழுது கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாக உள்ளனர்.

கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து உள்ளனர்.

திமுக ஆட்சியில் 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனையும் இந்த அரசு கைவிட இருக்கிறது. தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால் தான் பேருந்து நிலையத்தை மாற்ற முயற்சிக்க காரணம்.

இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படும். வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

மெட்ரோ ரயில் திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. மேலும் எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை.

மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும்  பணிகள் எனது ஆட்சியில் வேகமாக செயல்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மேலும் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போட்டு விட்டனர். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கி இருக்கிறது. ஆனைமலை நல்லாறு திட்டமும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது  மேலும் மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது கூறிய பெட்ரோல் டீசல் விலை  குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், முதியோர் ஓய்வூதிய உயர்வு, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூ.1000 என்ற திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர்.

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரத்தை படைத்துள்ளனர். ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும். சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது.  

எங்கே பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யாமல் உள்ளனர்.  சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் அரசாக இந்த அரசு உள்ளது. இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் "அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆறுகுட்டி அதிமுகவில் இருந்தார் தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார்." என தெரிவித்தார்.

கோவையில் ரூ.10 ஆயிரத்திற்கு மொபைல் வாங்கி ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை இலவசமா வாங்கிக்கலாம்..!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe