மேட்டுப்பாளையம் அருகே மானை விழுங்கிய மலைப்பாம்பு...

published 5 days ago

மேட்டுப்பாளையம் அருகே மானை விழுங்கிய மலைப்பாம்பு...

கோவை: கோவை, மேட்டுப்பாளையம் அடுத்த கூடலூர், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் மலை பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில் நெளிந்தபடி கிடந்து உள்ளது. 

இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், சுரேஷ்குமார் தலைமையில், வெற்றிவேல், வேல்முருகன், மோகன், முகமது அலி மற்றும் ஜுபேர் நாராயணன் ஆகிய 7 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை மீட்டு அது விழுங்கி இருந்த மானை லாவகமாக வெளியேற்றினர். 

பின்னர் உயிருடன் இருந்த அந்த மலைப் பாம்பை வனத் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர். மானை விழுங்கிய மலைப் பாம்பு கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe