கோவையில் வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் திமுக அரசை கடுமையாக சாடிய நெல்லை முபாரக்...

published 2 days ago

கோவையில் வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் திமுக அரசை கடுமையாக சாடிய நெல்லை முபாரக்...

கோவை: SDPI சார்பில் உக்கடம் லாரி பேட்டை பகுதியில் வக்பு உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார் மேலும் பல்வேறு மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

முன்னதாக வக்பு உரிமை மீட்பு குறித்து பேரணி நடைபெற்றது. கரும்புக்கடை பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது உக்கடம் லாரி பேட்டை மாநாடு திடலில் முடிவடைந்தது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய நெல்லை முபாரக், கோவையில் இந்த மாநாடு துவங்கியது வெற்றிக்கு அச்சாரமாக விளங்குவதாக தெரிவித்தார். சங்கிகளுக்கு அறிவில்லை என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம் எனவும் அண்டை மாநிலத்திலாவது கொஞ்சம் அறிவு இருக்கும் ஆனால் தமிழ்நாட்டில் இல்லை என விமர்சித்த அவர் அண்டாவை திருடி திண்பவர்கள் என கூறினார். பிலால் ஹாஜியார் என்பது பெயர் அல்ல ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அடையாளம் என கூறிய அவர் தமிழகம் முழுவதும் அந்த பெயரை வைக்க வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்தார். இந்த வக்பு சட்டம் என்பது ஒரு இறை இல்லத்தை பாதுகாக்கின்றது மட்டுமல்ல, இந்து கிறிஸ்டின் முஸ்லிம்களின் நம்பிக்கையே பாதுகாக்கின்ற மாநாடு என தெரிவித்தார். இந்தியாவில் ராணுவம் ரயில்வே துறைக்கு பிறகு 8 லட்சம் ஏக்கர் நிலங்களை நாங்கள் வைத்துள்ளோம் அதில் ஒரு அங்குலத்தை கூட தர முடியாது என தெரிவித்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தை வக்பு திருத்த சட்டம் என்று நாங்கள் பார்க்கவில்லை எனவும் அது வக்பு திருட்டு சட்டமாகவே பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் அந்த சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவு எடுக்கலாம் என்று இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் இது என்ன நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு மற்றும் வக்பு வாரியம் செய்கின்ற அநீதி தான் பெரிய அநீதி எனவும் தமிழ்நாடு அரசை போல் ஒரு கண்ணிற்கு மையும் ஒரு கண்ணிற்கு சுண்ணாம்பும் வைக்கின்ற அரசை பார்த்ததில்லை என தெரிவித்தார். சிக்கந்தர் மலை பற்றி நாங்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம் ஆனால் அரசு இதில் நுழைந்து எதுவும் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள் என தெரிவித்தார். நாகூருக்கு ஸ்டாலின் அரசு சந்தன கட்டையை தரவில்லை எனவும் அது ஜெயலலிதாவின் ஆட்சிலேயே தரப்பட்டு விட்டது என தெரிவித்தார். நாகூருக்கு சந்தன கட்டை சிக்கந்தர் மலைக்கு கொள்ளிக்கட்டையா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்கு பலவித சூட்சமங்களை செய்வார்கள் எனவும் கூறினார். அபூபக்கர் சாகீருக்கு பிணை மறுக்கப்பட்ட சட்டத்தை தான் ஆதரித்தவர்கள் திமுகவினர் எனவும் இது எவ்வளவோ பெரிய தவறு இதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளீர்களா எனவும் கேள்வி எழுப்பினார். விஸ்வரூபம் படத்தைப் பார்த்து சிறுபான்மை இன மக்களை ஜெயலலிதா அழைத்து பேசினார்கள் எனவும் அதே சமயம் இந்த சமூகம் அமரன் படத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்களை நடத்தியது? என கேள்வி எழுப்பிய அவர் எப்படி சமூக நீதி அரசின் தலைவராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். பெரியாரைப் பற்றி யாராவது தவறாக பேசினால் எஸ்டிபிஐ மதிக்காது எனவும் பெரியார் இந்த சமூகத்தின் அடையாளம் எனவும் இறந்தவர்களாக இருந்தால் யாராக இருந்தாலும் சரி பாஜகவினராக இருந்தாலும் சரி அவர்களை பற்றி நாங்கள் பேசுவதில்லை எனவும் ஆனால் அப்படி இருக்கும் பொழுது கூட பெரியாரைப் பற்றி பேசும் பொழுது நீங்களா இறங்கி போராடினீர்கள்? ஸ்டாலின் புகார் அளித்துவிட்டு ஜாலியாக இருந்து கொண்டார் ஆனால் தந்தை பெரியார் திராவிட கழக ராமகிருஷ்ணன் போராடி கைது செய்யப்பட்டார் என கூறினார்.

வக்பு க்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றார். தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் ஏக்க வக்பு சொத்துக்கள் இருக்கிறது எனவும் அதில் ஒரு லட்சம் ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும் வக்பு வாரியத்திலும் லஞ்சம் இருப்பதாக தெரிவித்தார். திருச்செந்துரை பிரச்சனை அடிப்படை திமுக அரசிடமும் உள்ளது என்றார். வக்பு உரிமையை காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றார். மேலும் இதில் அரசாங்கம் தலையிடுகின்ற தேவையும் இல்லை என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe