ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் : கோவையில் நடைபெற்ற இறுதிப் போட்டி

published 2 years ago

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் : கோவையில்  நடைபெற்ற இறுதிப் போட்டி

கோவை: கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்ற மாணவர்கள் மென்பொருள் தயாரிக்கும் இந்திய அளவிலான போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் மத்தியில் புதுப்படைப்பாகத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்ற மென்பொருள் வடிவமைப்பு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியானது அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்கள் மென்பொருள் பயன்பாட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பணிகளை எளிதாக்கும் மென்பொருள் தயாரிக்கும் விதமாக நடத்தப்படுகிறது.

ஸ்மார்ட் ஹேக்கத்தான் 2022ன் இறுதிப் போட்டியானது 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 2,033 மாணவர் குழுக்கள் கலந்து கொள்கின்றன.

கோவையில் இந்த போட்டியானது அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 மாணவர் குழுக்களை சேர்ந்த 163 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான மென்பொருள் தயாரிப்பில் 6 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த இரண்டு நாட்களும் மாணவர்கள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு அதனை நாளை சமர்ப்பிக்க உள்ளனர். இறுதியில் சிறந்த மென்பொருள் தயாரிக்கும் மாணவர் குழுவுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த இறுதிப் போட்டிகள் தொடக்க விழாவிற்கு கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில், கல்லூரின் முதல்வர் அகிலா தலைமை வகித்தார்.

 

கோவையில் ரூ.10 ஆயிரத்திற்கு மொபைல் வாங்கி ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை இலவசமா வாங்கிக்கலாம்..!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe