கோவை மத்திய சிறை வார்டன் எடுத்த விபரீத முடிவு...

published 3 days ago

கோவை மத்திய சிறை வார்டன் எடுத்த விபரீத முடிவு...

கோவை: கோவை மத்திய சிறையில் சேலத்தை சேர்ந்த விக்ரம் (வயது 27) வார்டனாக பணி புரிந்து வந்தார். விக்ரம் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார்.  இவர் தனது மனைவியுடன் காட்டூர் பாரதியார் சாலையில் உள்ள சிறைச் சாலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். 

அவர் நேற்று இரவு பணிக்கு வராததால்  சக காவலர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வசித்து வந்த வீட்டிற்கு நேரில் சென்றனர்.

வீட்டின் கதவை காவல் துறையினர் நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அங்கு விக்ரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ பணிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe