வெள்ளலூர் தரைப்பாலம் உடைந்தது - இது மூன்றாவது முறை.. வேதனையில் பொதுமக்கள்..!

published 2 years ago

வெள்ளலூர் தரைப்பாலம் உடைந்தது - இது மூன்றாவது முறை.. வேதனையில் பொதுமக்கள்..!

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது.  இந்நிலையில் வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால் போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து இந்த சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனிடையே  நேற்று பெய்த  மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூன்றாவது முறையாக அடித்து செல்லப்பட்டது.  இதனால் மீண்டும் வானக போக்குவதரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் 8 கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe