கோவை மக்களே வீக் எண்ட்-டை எஞ்ஜாய் பண்ண ரெடி ஆகிடுங்க...!!!

published 2 years ago

கோவை மக்களே வீக் எண்ட்-டை எஞ்ஜாய் பண்ண ரெடி ஆகிடுங்க...!!!

கோவை: கோவை மாநகராட்சியில் வார இறுதி நாள்களில், மக்களைக் கவரும் விதமாக இன்னிசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களில் வார இறுதி நாள்களில் மக்களைக் கவரும் விதமாக பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி உக்கடம் பெரியகுளத்தில்  ஆல் இன் ஆல் அங்காடி என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இங்கு விருப்பமுள்ளவர்கள் தங்களது பொருள்களைக் காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வரவேற்கப்படுகிறார்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். செப்டம்பா் 3 மற்றும் 4-ந் தேதிகளில் காலை 11 முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

வாலாங்குளத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் இன்னிசை ஈவ்னிங் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இசையுடனும், தேநீருடனும், தங்கள் குடும்பத்துடன் செலவிட இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது, செப்டம்பா் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தங்களது இசைக் குழுவினருடன் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

ஆரோக்கியமான வாழ்வின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்ளத்தான் நிகழ்ச்சியானது செப்டம்பா் 18-ந் தேதி காலை 6 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கக் கேட்ட கொள்ளப்படுகிறது.

மேலும், கோவையில் மாபெரும் உணவுத் திருவிழாவாக அறுசுவை ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. பாரம்பரியம் மற்றும் சமகால உணவுகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செப்டம்பா் 24, 25 ஆகிய 2 நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உணவுகளை விற்பனை செய்ய விரும்பும் அனைத்து தரப்பினரும் ஸ்டால் அமைக்க முன்பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், ஸ்டால்கள் முன்பதிவு செய்ய 9943944223, 8637490177 ஆகிய அலைபேசி எண்கள் மூலமாகவும், https://forms.gle/b2zDSVjEvYBZD2We8 என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe