கோவையில் அம்மன் அர்ஜுனன் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நிறைவு !!!

published 2 hours ago

கோவையில் அம்மன் அர்ஜுனன் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நிறைவு !!!

கோவை: கோவை அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் இன்று காலை முதல் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். 

லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை அடுத்து அவரது வீட்டில் முன்பு முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் குவிந்தனர்.  

சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சென்ற நிலையில் அவரது இல்லத்தில் திரண்டு இருந்த  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள், மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அம்மன் அர்ஜுனனை வரவேற்றனர். 

வீட்டை விட்டு வெளியே வந்த அம்மன் அர்ஜுனன் தொண்டர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அம்மன் அர்ஜுனன் பேசும்போது,

இந்த சோதனையானது கால்புணர்ச்சியால் செய்யப்பட்டதாகவும்2 கோடி 75 லட்சம் என வங்கி கணக்கில் உள்ளதாகவும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
லஞரச் ஒழிப்பு துறை சோதனை இரண்டு மணி நேரத்தில் முடிவடைந்ததாகவும் 7 மணிக்கு தான் செல்ல வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் இருந்ததாகவும் கூறினார்.

மேலும் அனைத்தும் சட்டப்படி சரியாகத் தான் இருந்ததாகவும் தாங்கள் வருமான வரித் துறையில் பதிவு செய்தது அனைத்தும் சரியாக தான் இருந்ததாகவும் தெரிவித்தார். பான் கார்டு, பாஸ்புக் உள்ளிட்டவற்றின் நகல்களை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும், சோதனை தொடர்பாக தனக்கு முன்பு எந்த தகவலும் தெரியவில்லை. காலை நடைபயிற்சி செல்லும் போது என்னை போனில்  அழைத்ததாக தெரிவித்தார்.

அ.தி.மு.க தொண்டர்கள் எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சமாட்டோம்  என்றவர் தன்னிடம் எந்த கேள்வியும் அதிகாரிகள் கேட்கவில்லை  எனவும் இது  முழுக்க, முழுக்க அரசியல் என தெரிவித்தார். செங்கோட்டையன் நேரில் வந்தது தொடர்பான கேள்விக்கு,  அனைவரும் ஒற்றுமையாக தான் இருப்பதாக பதிலளித்தார்.

மேலும் லஞ்ச் ஒழிப்புத் துறை சோதனைக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருத்தாக நன்றி தெரிவித்தவர்,
முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியை நிர்வாகிகள், தொண்டர்கள்  பக்கபலமாக உடன் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த வழக்கை நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கூறியவர், இந்த சோதனையை வைத்து அ.தி.மு.க தொண்டனை அசைத்து கூட பார்க்க முடியாது எனவும்  அச்சம் வந்ததால் சோதனை செய்கிறார்கள், அ.தி.மு.க தொண்டன் ஆலமர வேர் போன்று வலிமையாக இருப்பார்கள் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe