மும்மொழி கொள்கை குறித்தான கேள்வி- இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பதில்...

published 6 days ago

மும்மொழி கொள்கை குறித்தான கேள்வி- இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பதில்...

கோவை: தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படமாக தான் கிங்ஸ்டன் படம் இருக்கும் என்றும், இந்திய சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் அமைந்துள்ளதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் கோவையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் புரொமோஷன் குறித்து நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை திவ்யாபாரதி ஆகியோர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,இது ஒரு திகில் சாகச படம்,இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை.கடலுக்கு அடியில் இப்படம் எடுத்துள்ளதால் பிரமாண்டமாக இருக்கும்.பெரிய பட்ஜடாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.இந்தியன் சினிமாவில் இது ஒரு அனுபவமாக இருக்கும்.ஒரு மீனவ கிராமத்தால் மீன்பிடிக்க உள்ளே போக முடியாது.

அதனுடைய வலிகளை கொண்டு மீனவ கிராமத்தால் உருவாக்கப்பட்ட கதையாக இந்த படம் உள்ளது.ஹாலிவுட் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள் பற்றி எடுப்பார்கள், ஆனால் இந்த படம் தூத்துக்குடி பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் என்ன நடக்குது என்பது பற்றி எடுத்துள்ளோம். நம்ம ஊரு கதையாக இது எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது காதல், காமெடி, பேய் படம் கிடையாது. இதில் எல்லாமே புதுமையாக இருக்கும். இது ஒரு பாட்டி கதையாக இருக்கும். அந்த ஊரில் நல்லது செய்த ஒருவரை கொண்டு எடுக்கப்பட்ட படம்.தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. 

தூத்துக்குடியில் இருக்கக்கூடியவர்கள் நிலைமை குறித்து இந்த படத்தில் இருக்கும்.இந்தப் படத்திற்காக அனைவருமே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம்இது ஒரு பாட்டி கதை, ஒரு ஊர் சார்ந்த கதை, இந்த படத்திற்கு பெரிய எக்ஸ்போர்ட் கொடுத்து இருக்கேன் என நம்புகிறேன்.

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், அரசியலாக இந்த இடத்தில் பேசவில்லை, கண்டிப்பாக இதற்கான பதிலை நான் என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவேன்.

இந்தக் கதை பார்ட் நான்கு வரை உள்ளது. பெரிய கதையை இருக்கிறது.இந்தப் படத்தில் உள்ள கேரக்டரை சார்ந்தவர்களை கொண்டு படத்தின் பெயர் அமைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe