தடாகம் அருகே தோட்டத்து கதவுகளை உடைத்து சென்ற காட்டுயானைகள்- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 1 day ago

தடாகம் அருகே தோட்டத்து கதவுகளை உடைத்து சென்ற காட்டுயானைகள்- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை, மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் தினசரி வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவது வழக்கம். 

இந்த நிலையில் கோவை மாவட்டம் கணுவாய் அடுத்து உள்ள காளையனூர் பகுதியில் உள்ள ராமலிங்கம் என்பவர் தோட்டத்தில் நள்ளிரவு இரண்டு காட்டு யானைகள் காட்டு யானைகள் வந்தது.

அப்போது தோட்டத்தின் கதவு பூட்டி இருந்ததால் வெளியே செல்வதற்கு வழி இல்லாதால் முன்னாள் வந்த காட்டு யானை அந்த கதவை உடைத்து தோட்டத்திற்கு விட்டு வெளியேறி மறுபுறம் செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் யானை கதவை உடைத்து வெளியே செல்லும் போது அந்த பகுதியில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. சற்று தாமதமாக அந்த சாலையை கடந்து இருந்தால் யானை அந்த நபரை தாக்கி இருக்கும் என மக்கள் கூறுகின்றனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/HUereBvxAvQ?si=JsRjvk-ePcirXNw5

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe