கோவையில் பறவைகளுக்காக தண்ணீர் சட்டிகள்- பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய வனத்துறை...

published 2 days ago

கோவையில் பறவைகளுக்காக தண்ணீர் சட்டிகள்- பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய வனத்துறை...

கோவை: கோடை காலத்தை முன்னிட்டு பறவைகளின் தாகம் தணிப்பதற்காக கோவை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பறவைகளுகான நீர் சட்டிகள் வழங்கப்பட்டது.


 இந்த நிகழ்வில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி பிரமோத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அந்த நீர் சட்டிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், வெயில் காலத்தில் பறவைகளுக்கு தேவையான ஒன்று நீர் எனவும்  கோவை மாநகர் முழுவதும் பறவைகளுக்கு நீர் கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களிடம் பறவைகளுக்காக நீர் சட்டிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

கோவையில் வனவிலங்கு மனித மோதலை தடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் மனித- வனவிலங்குகள் மோதலை தடுப்பதற்கு வரும் காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ்,
இந்த முறை ஆனைமலை புலிகள் காப்பதத்தில் விலங்குகளுக்கு வைக்கப்பட்ட நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்காகவே புதிய டிராக்டர்கள் வாங்கப்பட்டுள்ளது என்றார். மேலும்
காடுகளுக்குள் ஏற்படும் தீ குறித்து Satellite  புகைப்படங்கள் மூலம் நமக்கு உடனடியாக எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் குறுஞ்செய்தி வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கவும் முடிந்தவரை அதனை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் பேசிய மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பாரதியார் பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள தேவையற்ற புட்கள் மற்றும் செடிகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அங்கு சுமார் 400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது எனவும்
அப்பகுதியில் கொட்டப்படும் உணவு கழிவுகள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

தொண்டாமுத்தூர் ஓணப்பாளையம் பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது எனவும் தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த வேட்டையன் எனும் காட்டு யானை ஒரு குழுவுடன் இணைந்து விட்டதாகவும்
இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe