சமச்சீர் கல்வியில் வட்டார பெருமையை குறிப்பிடும் பாடங்கள் இல்லை- பேரூர் ஆதீனம் தெரிவிப்பு...

published 2 days ago

சமச்சீர் கல்வியில் வட்டார பெருமையை குறிப்பிடும் பாடங்கள் இல்லை- பேரூர் ஆதீனம் தெரிவிப்பு...

கோவை: கோவை சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் எஸ் கே கார்வேந்தன் எழுதிய கொங்கு ரத்தினங்கள் மற்றும் கொங்கு மாமணிகள் நூல்களின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் இன்று நடைபெற்றது.

 

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கெளமார மடாலம் குமரகுருபர சுவாமிகள், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் மற்றும் தொழில்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

கவின் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள கொங்கு ரத்தினங்கள் மற்றும் கொங்கு மாமணிகள் நூல்களை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த புத்தகத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்பும் சுதந்திரம் அடைந்த பின்பும் வந்த தலைவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளதாக தெரிவித்தார். இந்த புத்தகத்தை எழுதி கார்வேந்தன் தான் சார்ந்த கட்சியை சேர்ந்தவர் எனவும் வழக்கறிஞர் எனவும் குறிப்பிட்ட அவர் ஒரு கர்மயோகி எனவும் புகழ்ந்தார். இந்த புத்தகத்தில் ஒவ்வொரு விஷயங்களும் ஆழமாக உள்ளதாக தெரிவித்த அவர் கார்வேந்தன் அடுத்ததாக கொங்கு வைரங்கள் என்ற புத்தகத்தை எழுத வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார். 



இயற்கையாகவே கிளஸ்டர் அமைந்த பகுதி தான் கொங்கு மண்டலம் என தெரிவித்த அவர் கரூர் ஈரோடு நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்கள் குறித்து குறிப்பிட்டார். மேலும் திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக எந்த நகரமும் இல்லை எனவும் கடந்த 40 ஆண்டுகளாக 40 சதவிகிதம் தொழில் துறையில் வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நம்முடைய நாட்டிலேயே கோவை மாவட்டத்தில் மட்டும் 27% கல்லூரிகள் இருப்பதாகவும் மற்றும் 441 கல்லூரிகள் கோவை மாவட்டத்தில் உள்ளது என தெரிவித்தார். கொங்கு பகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது ஆன்மீகம் தான் என தெரிவித்த அவர் ஆன்மீகம் என்பது அனைவரிடமும் பின்னிப்பிணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சேமிப்பு பழக்கம் கொங்கு பகுதி மக்களுக்கு அதிகம் எனவும் கோவையில் இருக்கும் அளவிற்கு தமிழகத்தில் எந்த இடங்களிலும் அறக்கட்டளைகள் எனக்கு தெரிந்து இல்லை என தெரிவித்தார்.

ஜிடி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு படம் இளைஞர்களுக்கு மிக முக்கியமான படம் எனவும் ஜிடி நாயுடுவை பற்றி மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறிய அவர் தற்பொழுது அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிப்பதை சுட்டிக்காட்டினார்.

கள் வேண்டுமென்று நாம் கூறுவதாகவும் கள் என்றால் அதில் ஆல்கஹால் உள்ளது என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இயற்கையாகவே உருவாகக்கூடிய ஆல்கஹால் தான் உள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் இதனை மதுபானங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது எனவும் கள் ஒரு Natural Medicine ஆகும் என்றார். குடிகாரர்கள் தான் கள்ளு குடிப்பார்கள் என்ற பார்வை உள்ளதை குறிப்பிட்ட அவர் இது சம்பந்தமாக அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றாக இணைந்து பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 
மேலும் மொழி சம்பந்தமாக ஒவ்வொரு கட்சிகளும் அவர்களது கருத்துக்களை தெரிவிப்பதை நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார் தற்பொழுது பேச்சு பொருளாக இருப்பது தேசிய கல்விக் கொள்கை எனவும் 1970களில் படித்தவர்களுக்கு அப்பொழுது படிக்கும் பொழுது வட்டார சிறப்புகள் இருந்ததாகவும் அப்பொழுது இருந்த குழந்தைகள் வட்டாரத்தை பற்றியும் மாவட்டத்தைப் பற்றியும் படிக்க வாய்ப்பு இருந்ததாகவும் குறிப்பிட்ட அவர் தற்பொழுது நாம் படிக்கும் சமச்சீர் கல்வியில் அவ்வாறு இல்லை என தெரிவித்தார். அதனை மீண்டும் கொண்டு சேர்க்கின்ற வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளதாகவும் வட்டார அளவில் இருக்கக்கூடிய பெருமைகளை உணர்த்துகின்ற வகையில் தேசிய கல்வி கொள்கை உள்ளது எனவும் குறிப்பிட்ட அவர் அதன் படி கொங்கு பகுதியை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் இருக்கும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe