தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், கடைசி நாள் அறிவிப்பு...

published 2 days ago

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், கடைசி நாள் அறிவிப்பு...

கோவை:  சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சரால் சட்டமன்ற பேரவையில் 03.09.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றியவர்களுக்காக பசுமை சாம்பியன் விருது என்ற விருதினை 2021-22 ஆண்டிலிருந்து ருபாய் ஒரு கோடி மதிப்பிலான பரிசுத்தொகையினை வழங்கி வருகின்றது. 

இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

பசுமை சாம்பியன் விருதுக்கு தனிநபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியோர் தகுதியுடையவர் ஆவர். இவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் பசுமை சாம்பியன் விருதிற்காக மதிப்பீடு செய்யப்படுவர்.

இவ்விருதிற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய பசுமை பொருட்கள் மற்றும் பசுமை தொழிற்நுட்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நீடித்த நிலையான வளர்ச்சி, திடக்கழிவுகள் மேலாண்மை, நீர் நிலைகள் பாதுகாப்புநீர் சேமிப்பு காலநிலை மாற்ற தகவமைப்பு மற்றும் தவிர்ப்பு, காற்று மாசு கட்டுப்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் சூழலியல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு கூடலோரப் பகுதி பாதுகாப்பு மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும்.

இவ்விருதினை பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் குழுவால் பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கப்படுவோர் அரசினால் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படவுள்ளதுகோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்தவரையிலும் மூன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவ்விருதிற்கான தகுதிகள், விருதிற்குரியோர் தேர்ந்தெடுக்கப்படும் விதம், விண்ணப்பபடிவம் போன்ற மேல் விவரங்களை www.tnpcb.gov.in என்ற இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்கோயம்புத்தூர் தெற்கு அவர்களை அனுகுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஏப்ரல் 15, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார்  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe