கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- பல மணி நேர விசாரணை முடிந்து திரும்பிய பங்களா மேனேஜர்...

published 2 days ago

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- பல மணி நேர விசாரணை முடிந்து திரும்பிய பங்களா மேனேஜர்...

கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சி பி சி ஐ டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் நேரில் ஆஜராகும்படி கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று ஆஜரானார். காலை சுமார் 10:30 மணியளவில் காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான அவர் மதிய உணவிற்கு மட்டும் வெளியில் சென்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். 

அவருடன் அவரது தரப்பு வழக்கறிஞர் ராஜ்குமார் உடன் இருந்தார். சுமார் 8 மணி நேரம் விசாரணை முடிந்து புறப்பட்டார்.

விசாரணை முடிந்து வெளியில் வந்த போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வழக்கறிஞர் ராஜ்குமார்,  வழக்கமான விசாரணை தான் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டு கூறுகின்ற வகையில் எதுவும் இல்லை என தெரிவித்தார். என்ன நடந்தது என்பது சம்பந்தமாக தான் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கான பதில்களும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கடந்த முறை சம்மன் அனுப்பும் பொழுது தவிர்க்க முடியாத காரணங்களால் ஆஜராக முடியாமல் போய்விட்டது அதனை அவர்களுக்கும் தெரிவித்து இருந்தோம்  என கூறினார். இன்றைய விசாரணை முடிந்ததாக கூறிய அவர் மீண்டும் ஆஜராகுமாறு எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe