வெள்ளியங்கிரியில் வனத்துறையினரை விரட்டிய காட்டுயானை- பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்...

published 1 week ago

வெள்ளியங்கிரியில் வனத்துறையினரை விரட்டிய காட்டுயானை- பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்...

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலை கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.

இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1 - ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெள்ளியங்கிரி, பூண்டி அடிவாரத்தில்  உள்ள பழக்கடைகளை மற்றும் அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் உணவு கூடத்தையும் சேதப்படுத்தி அங்கு வைத்து இருந்த பொருட்களை தின்று சூறையாடி செல்வதை தொடர்ந்து நடைபெற்று வந்தது. அங்கு உள்ள பொருள்களை ருசி கண்ட யானை மீண்டும், மீண்டும் அங்கு வருவது வாடிக்கையாகி விட்டது. 

இந்நிலையில் அங்கு வந்த அந்த ஒற்றைக் காட்டு யானையை கண்ட பக்தர்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த பலத்துறை ஊழியர்கள் மேலும் யானை உள்ளே வராமல் விரட்ட சென்றனர். அப்பொழுது அவர்களை யானை விரட்டியது. அங்கு இருந்து தலைதரிக்க வனத்துறை ஊழியர்கள் தப்பி ஓடி வந்தனர். 

இதனைக் கண்ட அங்கு கூடியிருந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு அங்கு இருந்து அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர் வனத் துறையினர். யானை விரட்டும் போது அங்கு இருந்த பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார் அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DIF1rXVPSL-/?igsh=Y3MxYzQ4NzVjdWVv

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe