கணுவாய் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்...

published 1 week ago

கணுவாய் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி குதிரை வண்டி பந்தயம்...

கோவை: முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பரிசுகளை வழங்கினார்...


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை நடத்தியது.  கணுவாய் முதல் மாங்கரை வரை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த போட்டிகள் நடைபெற்றன. 

இதில் 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும் 50-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் பங்கேற்றன.  இப்போட்டியில் கலந்து கொண்ட, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அவர்
முதல்வர் பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இது போன்ற போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இங்கு போட்டியை நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு நானும் முதலமைச்சர் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe