கேஸ் சிலிண்டர் விலை உயர்வு- கோவை தவெக வினர் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்...

published 2 days ago

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு- கோவை தவெக வினர் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்...

கோவை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2024 மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. 

இதனால், சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது. கடந்த ஓராண்டில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு எரிவாய்வு சிலிண்டரின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், மானியம் வழங்குவதாக கூறி வழங்காத மாநில அரசை கண்டித்தும் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூற்றுக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe