அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோவையில் இந்து அன்னையர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்...

published 4 days ago

அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோவையில் இந்து அன்னையர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்...

கோவை: அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு கவர்னரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி பெண்கள் பற்றி பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் எதிர்க்கட்சியினர் பலரும் அமைச்சர் பொன்முடியை கண்டித்து தொடர்ந்து  ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இந்து அன்னையர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து பேட்டி அளித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார்சமீப நாட்களாகவே திமுகவின் தலைவர்கள் இந்து மதத்தையும் இந்து மத வழிபாடுகளையும் ப
கொச்சையாக பேசி வருவதாகவும்  அமைச்சர் பொன்முடி பதவி ஏற்கும் பொழுது இந்திய இறையாண்மையை பேணி காப்பேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது ஒரு மதத்தை இழிவு படுத்தி பேசுவது சரியா என கேள்வி எழுப்பினார். 

மேலும் அமைச்சர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அவர்  அமைச்சர் பொன்முடி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கவர்னரிடம் மனு அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe