கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை- பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டி கருப்பு ரிப்பன்...

published 1 day ago

கோவையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை- பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ வேண்டி கருப்பு ரிப்பன்...

கோவை

ரம்ஜானை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்...

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடபடுகிறது. ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. 

இந்த மாதம் இறைவனை  நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும்,நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் 
இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு  இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு  ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை  முன்னிட்டு கோவை கரும்பு கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகையானது நடைபெற்றது. இதில் புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. மேலும் கீழே அமர்ந்து தொழுகை செய்ய முடியாதவர்களுக்காக நாற்காலி வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe