கோவையில் உள்ள அமேசான் குடோனில் 95 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்- காரணம் என்ன?

published 1 week ago

கோவையில் உள்ள அமேசான் குடோனில் 95 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்- காரணம் என்ன?

கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள அமேசான் குடோனில் 95 லட்சம் மதிப்பிலான தரச் சான்று இல்லாத பொருட்களை இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இங்கு ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், குழந்தைகளுக்கான டயாபர், வாட்டர் ஹீட்டர், சிசிடிவி கேமராக்கள், காலனி என சுமார் 4500 பொருட்கள் தரச் சான்று பெறாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய தர நிர்ணய அமைவினத்தின் கோயம்புத்தூர் அலுவலக அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டு தரச் சான்று இல்லாத பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 95 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆன்லைனில் வாங்கும்போது உரிய தரச் சான்று உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும் எனவும், ஐ எஸ் ஐ முத்திரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், BIS Care எனும் மொபைல் செயலியை பயன்படுத்தி பொருட்களின் பதிவு சான்றிதழ் மற்றும் தரத்தினை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe